தாகத்தின் புலம்பல்கள்

தாகத்தின் புலம்பல்கள்
================

தண்ணீர் தண்ணீர் தெருவெங்கும்
போட்டில் பயணம்
தார் ரோட்டில் போன
சென்னையில் சென்னையில் இன்று
தண்ணீர் தண்ணீர் என்று
கண்ணீர் கண்ணீர் விட்டு
சொட்டு நீருக்கு
முட்டி மோதும்
அவல நிலை கேளாயோ !


ஏரி தேடி
வாரி கட்டி
மால்ஸ் கட்டின பாவமா ?
மாரி பொழிய
நட்டு வைத்த மரத்தை அழித்து
மாடி வீடும் பாலம் போட்டும்
ஏரி எல்லாம்
ஏப்பம் விட்ட கோலமா !


கப்பம் கட்டும் பணத்தை எல்லாம்
கட்டு கட்டா சுருட்டிட்டு
ஒப்புக்காக ஒன்னு ரெண்டு
உருப்புடாத ஓசி பொருளுக்கு
வெட்கம் இல்லாம காச வாங்கி
ஒட்டு போட்ட கேடுக்கு
ஒத்த குடம் தண்ணி வாங்க
குத்து சண்டை எதுக்கு ?


நம்ம பய வெளச்ச
நல்ல இளநீரும் பயனியும் ஒதுக்குற
பெப்சி கோக் வாட்டர் பாட்டில்
காசு கொடுத்து வாங்குற
காய்ச்சி குடிக்க வக்கில்லாம
ஆர்ஓ வாட்டர் மாட்டுற!
எடுத்த சபதம் யாவும்
சல்லி கட்டோடு மறக்குற ?


அனைத்து கட்சியும்
ஆண்டு அழித்து
அணைகள் ஏதும் கட்டல ! இதுல
கர்நாடக நீர் தரலைனு வெத்து
ஆட்டம் ஆடுற
தந்த நீரை சேர்த்து வைக்க
எந்த முயற்ச்சியும் எடுக்கல
எதுக்கு நாலும்
எதிர் கட்சியை
எளிதில் கையை காட்டுற !


பச்சைதமிழன் வாசகம் பேசி
எச்சை வாரி இறைக்கிற
ஆட்சி கட்டில் ஏறிய பின்
அடுத்த நாட்டில்
வங்கி கணக்கு வைக்குற
படித்த இளையர் நாட்டை ஆளும்
நாளும் இங்கு கூடுமோ !
வடித்த கண்ணீர் துளிகளுக்கு
விடைதான் அன்று காணுமோ ?

எண்ணமும் கவியும்.
-நம்பி கே

எழுதியவர் : நம்பி கே (21-Jun-19, 12:46 pm)
சேர்த்தது : நம்பி கே,
பார்வை : 46

மேலே