தமிழ் வாழ்க
தமிழ்....
நான் விரும்பும் மொழி
நானிலம் போற்றும் மொழி...
தெவிட்டாத மொழி
தேட வைக்கும் மொழி...
தன்னலம் நீக்கும் மொழி
தாயகம் காக்கும் மொழி...
தாய் இல்லாதவர்களுக்கும்
தாயாக இருக்கும் மொழி
என் தாய் மொழி...
ஆயிரம் மொழிகள்
இருந்தாலும்
அசைக்க முடியாத மொழி
என் தமிழ் மொழி...
அநேக மொழிகள் இருந்தாலும்
அனைவரையும்
அன்புடன் வாழ்த்த
அடிப்படையான மொழி...
தங்கத் தமிழை வாழ்த்த
என்னிடம்
தங்கம்
இல்லாமல் போகலாம்.
ஆனால்
தங்கமான மனம்
இருக்கிறது...
சங்கத் தமிழை வளர்க்க சங்கம்