கழித்துவாரங்களின் கூடலால்

கழித்துவாரங்களின் கூடலால்
இழிப்பிறவி எடுத்த உயிரனமாய்
பழி பல செய்து பாவங்களோடே
பல பல கேடுகளுக்கு மூலமாகி

பதறாமல் கொலை செய்து
பஞ்சமா பாதகத்தில் திளைத்து
கடும் போதைக்கு அடிமையாகி
கட்டுபாடற்ற தீய எண்ணம் கொண்டு

பொது நலத்தை சிதைத்து
பொதுச் சொத்தால் பெருஞ்செல்வம் ஈட்டி
தர்ம காரியங்களில் தர்மத்தை கெடுத்து
நயவச்சகத்தை காட்ட நான்மறை படித்து

நல்லோர் உள்ளம் நடு நடுங்கச் செய்து
நகக்கண்ணில் சேரும் அழுக்குப் போல்
நவத்துவாரங்களிலும் நவ வகை நஞ்சால்
நாள்தோறும் கேடு விளைவிக்க பிறந்ததே அறறிவு உயிர்.
--- நன்னாடன்.

எழுதியவர் : நன்னாடன் (5-Jul-19, 9:07 am)
சேர்த்தது : நன்னாடன்
பார்வை : 393

மேலே