பிறந்த மண் மதுரை கவிஞர் இரா இரவி

பிறந்த மண் மதுரை ! கவிஞர் இரா. இரவி.

பிறந்த மண் பற்று அனைவருக்கும் வேண்டும்
பிறந்த ஊருக்கு இணையான ஊர் வேறில்லை!

உலகில் எந்த மூலைக்கு சென்று வாழ்ந்தாலும்
உயர்ந்த பிறந்த மண் பாசம் வேண்டும்!

சொர்க்கம் என்பது விண்ணில் இல்லை
சொர்க்கம் என்பது பிறந்த மண்ணில் உள்ளது!

நான் பிறந்த மதுரையின் மீது எனக்கு
நாளும் எந்நாளும் பற்று உண்டு எனக்கு!

முதல் மனிதன் பிறந்த ஊர் மதுரையாகும்
முடிவு செய்து அறிவிக்கும் காலம் வரும்!

சதுரம் சதுரமாக வடிவமைக்கப்பட்ட மதுரை
சிகரம் போன்ற பெருமைகள் மிக்க மதுரை!

வந்தாரை எல்லாம் வாழ வைக்கும் மதுரை
வளங்கள் மிக்க மதுரை நான் பிறந்த மதுரை!

எழுதியவர் : கவிஞர் இரா .இரவி (4-Jul-19, 10:04 pm)
சேர்த்தது : கவிஞர் இரா இரவி
பார்வை : 78

மேலே