சேமிப்பு

நாளையை நினைத்து வங்கியில்
பணம் சேமிக்கின்றோம்
நினைவுகளை சேமித்து வைக்கின்றோம்
'புகைப்பட ஆல்பமாக'- இத்தனை ஏன்
மறையும் முன் மனிதனின் கண்களும் கூட
அவன் சம்மதத்துடன் எடுக்கப்பட்டு
சேமிக்கப்படுகிறது சிலருக்கு கண் பார்வைக்காக
இத்தனையும் சேமிக்க முன்வரும் நாம்
தினம் சில சொட்டு நீர் சேமிக்க தவறுவதேன்
நாம் சேமிக்கும் ஒவ்வோர் துளியும்
மீண்டும் நிலத்தையே நாடி போனால்
வானம் பொய்த்த பொது நீர் நீர் என்று
அலையும் மக்களுக்கு சில நாலாவது
நீர் தரலாமே ……மண்ணீராய்!

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன் -வாசு (4-Jul-19, 9:44 pm)
Tanglish : semippu
பார்வை : 96

மேலே