அங்கன்வாடா

(நீதிமன்றம்)
கண்ணப்பன்ங்கற இந்த இளைஞரை படுகாயம் ஏற்படற அளவுக்கு எதுக்கு அடிச்ச?
@@@@@#
அய்யா, சாமி என்னை இந்தக் கண்ணப்பன் கேவலமான முறையில் கிண்டல் பண்ணிட்டாங்க. எனக்கு வந்த ஆத்திரத்தில் போட்டு கடுமைமயாத் தாக்கிட்டேனுங்க அய்யா.
@@@@
அப்பிடி கேவலமான முறையில என்ன சொல்லி இந்தக் கண்ணப்பன் உன்னை கிண்டல் பண்ணினாரு?
@@@@@
எம் பேரு 'அங்கப்பன்'னுங்க அய்யா. எம் பேரை சுருக்கமா எல்லோரும் 'அங்கன், அங்கன்'னு கூப்புடுவாங்க அய்யா. இந்தக் கண்ணப்பன் என்னை 'அங்கன்வாடி'ன்னு கூப்புட்டானுங்க. நான் ஆம்பளை. என்னை 'அங்கன்வாடா'ன்னு கூப்பிட்டுட்டிருந்தாக்கூட அவன லேசா அடிச்சிட்டு விட்டிருப்பேனுங்க. நான் என்ன பொம்பளையா என்னை அவன் 'அங்கன்வாடி'ன்னு கூப்பிட. அதனாலதானுங்க ஆத்திரத்தில அவனைக் கடுமையாத் தாக்கிட்டேனுங்க. என்னை மன்னிச்சிடுங்க அய்யா.
@@@@@
கண்ணப்பன் உன்னை இழிவுபடுத்தியதும் நீ கண்ணப்பனைக் கடுமையாத் தாக்கியதும் குற்றம். நீ கண்ணப்பனுடைய மருத்துவச் செலவை ஏத்துக்கணும். உன்னை விடுதலை செய்கிறேன். இனிமேல். உன்னை யாராவது கிண்டல் பண்ணினா ஊர்ப் பெரியவங்கிட்டச் சொல்லி கிண்டல் பண்ணின நபரை உன்னிடம் மன்னிப்புக் கேட்கச் சொல்.
@@@@@@
சரிங்க அய்யா.

எழுதியவர் : மலர் (23-Jul-19, 7:24 pm)
சேர்த்தது : மலர்1991 -
பார்வை : 31

மேலே