வானம் பார்த்த பூமி இராமநாதபுரம்
மேகம் சோகம் தீர்க்காதா
ஏக்கம் கொஞ்சம் தீராத
வானம் கண்ணீர் சிந்தாதா
பூமியின் அழுகை ஓயதா
வானத்தின் திரையை
வாள் வீசி கிழித்திடவா
வாருங்கள் போவோம்
ஏணிகள் அமைத்திடவா
நடந்து போகும் மேகமே
எங்களை கடந்து போக சற்று கீழிறங்கு
உயர்ந்து பார்க்கும் வானமே
எங்களின் சோகத்தை நீ முடக்கு
ஏத்தனம் ஏந்தி ஏளனமாய் நிற்கின்றோம்
பிராத்தனை செய்து தோரணமாய் கேட்கின்றோம்
நீ வாய்பேச ஏன் மறுக்கிறாய்
வானத்தின் பாதையை ஏன் மறைகிறாய்
தண்ணீர் வழங்கிவிடு ஒருமுறை
கண்ணீர் இல்லாமல் வாழட்டும் இந்த தலைமுறை
நானும் இந்த
தலைமுறையை சேர்ந்தவன்தான்