அழகி

இலைகள் மறைத்த
ரோஜா மலர்
திரைகள் மூடிய
அவள் செவ்விதழ்

நீலக் கடலில்
நீந்தும்
கயல் மீன்கள்
நீல விழியில்
அசையும்
கரு மணிகள்

மேகம் மறைத்த
வெண்ணிலா
கூந்தல் மறைத்த
அவள் முகம்

அஷ்றப் அலி

எழுதியவர் : ala ali (4-Sep-19, 1:53 pm)
சேர்த்தது : அஷ்றப் அலி
Tanglish : azhagi
பார்வை : 359

மேலே