கார்கில் விதவைகள்

எனை மறந்தாயோ! இல்லை
துணை இழந்தாயோ!
நீயின்றி தவிப்புகளும் என்னை
காயப்படுத்திப் பார்க்கிறது...

பாவம் பார்த்து
பழகக்கூட சந்தோசம்
யோசிக்கிறது

மாமா,
இதயம் இயல்பாய் துடிக்கிறது
சுவாசம் இதமாய் இசைக்கிறது
மனம் மட்டும் உனையே தேடுகிறது
வருவாயா... மாமா.
இந்தப்பாவிமனத் தவிப்புகளுக்கு
பாதையொன்று தருவாயா... மாமா...

இராணுவம் அழைத்த செய்திக் கேட்டு
என் ஆண்மாவே! எல்லைச் சென்றது
மாமா,உன் மடியென எண்ணி
வாசல் படியில் பூத்திருந்தேன்

அடிக்கடி சொல்வாய்...
"இமயம் வெறும் மலையல்ல" என்று
நீ சொன்ன போது விளங்கவில்லை...
விளங்கி விட்டது மாமா
நீ அருகில் இல்லையே...

இந்தியாவின் கவசம்
என் இதயத்தை கொன்றது
மாமா, வீரன் என்ற பட்டத்தில்
நீ வாழ்ந்து கொண்டிருக்கிறாய்
உன் நினைவைச் சுமந்து நானும்
விதவையென்ற பட்டத்தில்
செத்து க்கொண்டிருக்கிறேன்..

நிற்கிறாய் நீ வாசலில்
சிரிக்கிறாய் நீ தோட்டத்தில்
பாடுகிறாய் நீ சன்னலில்
பார்க்கத்துடிக்கிறேன் பக்கத்தில் வருவாயாjjQuery171030430319417823837_1567932423639?

எழுதியவர் : கல்லறை செல்வன் (8-Sep-19, 2:08 pm)
பார்வை : 180

மேலே