சூட்சும சரீரம்
வரையறை இல்லா வாழ்வில்லை
வரம்புணர்ந்து வாழ்வதில் ஜீவனில்லை
திசையறிந்து பிறப்பதில்லை
திசையில்லாத பிறப்பேயில்லை
திசையறிய வாழ்கிறோம்
திசைக்கொரு வாழ்வும் காண்கிறோம்
வழங்கியதை வாழ்ந்துவிடு
அதில் உன்னை நீயே வரைந்துவிடு / அளந்துவிடு
வரையறுக்கப்பட்ட பிறப்பெனினும்
நம் வாழ்வே நம்மை வடிவமைக்கும் சூட்சும சரீரம்