விஜயகுமார் பலனிச்வாமி - சுயவிவரம்
(Profile)
எழுத்தாளர்
இயற்பெயர் | : விஜயகுமார் பலனிச்வாமி |
இடம் | : |
பிறந்த தேதி | : |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 29-Oct-2015 |
பார்த்தவர்கள் | : 109 |
புள்ளி | : 30 |
செவ்வகம்- இணைப்பு -விரிவாக்கம்-பகிர்வு வாழ்க்கை-காத்திருப்பு-கொதிநிலை-விடுதலை
வரையறை இல்லா வாழ்வில்லை
வரம்புணர்ந்து வாழ்வதில் ஜீவனில்லை
திசையறிந்து பிறப்பதில்லை
திசையில்லாத பிறப்பேயில்லை
திசையறிய வாழ்கிறோம்
திசைக்கொரு வாழ்வும் காண்கிறோம்
வழங்கியதை வாழ்ந்துவிடு
அதில் உன்னை நீயே வரைந்துவிடு / அளந்துவிடு
வரையறுக்கப்பட்ட பிறப்பெனினும்
நம் வாழ்வே நம்மை வடிவமைக்கும் சூட்சும சரீரம்
என் அகம் காணும்முன்,
பன்முகம் கொண்டேன்!
காதல் அறியும்முன்
காமம் கொண்டேன்
ஆண்மை அறியுமுன்,
பெண்மை புறிந்தேன்!
விதைக்குமுன் (மரம்/மனம் )
நிழல் (அதன்/உன்) கண்டேன் !
வினா அறியுமுன்
விடை கண்டேன்!
தந்தைமனம் தவழும்முன்
பிள்ளைகுணம் அறிந்தேன்!
காண்பதை அறியுமுன்,
காலம் கடந்தேன் !
கதை புரியுமுன்,
முடிவை உணரந்தேன்.
நான் !
ஆண் எனும் ஆணவத்தின் அடர்ந்த காடு
உள்ளிருக்கும் என் பாசத்தின் படர்ந்த வீடு
அடி பேதை பெண்னே !
உள்ளத்தின்(உண்மையின்) வெளிச்சத்தில் அதை நீ தேடு
கோபம் எனும் புலியும் பதுங்கிருக்கும்
அதை தீண்டுவது தவறென்று உனக்கு தெரிந்திருக்கும்.
ஆண் எனும் ஆணவத்தின் அடர்ந்த காடு
நேசத்தோடு நித்தம் நீ விளையாடு..
வாழ்க்கை எனும் கருவறை,
நம்மை சிறைகொள்ளும் உள்ளிருக்கும்வரை !
உடல் எனும் குதிரையேறி, மனம்போகும் சவாரி
அது!
உண்மைகளை உணர்த்தும், பல பாதைகள் மாறி !
இலக்கை நோக்கிய பயணம்,
இதனிடையே நம் வாழ்வியல் தருணம்
வாழ்க்கையும் வளம்பெறும்,
அதில் சோதனைகளும் இடம்பெறும்.
உன்,
அச்சம் என்ற பலகீனம்,
நீ,
துச்சம் என்றதும் பலமாகும்,
பின்,
உச்சம் உனது உணர்வாகும்.
ரணமாக்கும் உணர்வுகளை,
குணமாக்கும் சில நினைவுகள்.
கசந்துப்போகும் நினைவுகளை,
கடந்துப்போகும் பல தருணங்கள்
தடமாறிய தருணங்களை
இடம் மாற்றும் பல நிகழ்வுகள்
நித்தம் நிலைமாறும் நிகழ்வுகளை,
நிஜமாக்கும் நம் வாழ்க்கை
நிலைகொள்ளாத ஒரு இயற்கை / செயற்கை
கவிதை என்பது
மானுடம் மட்டுமே எழுதுவது என்று
யார் சொன்னது
கடவுளும் கவிதை எழுதி
கண்டதுண்டா
65 ஆண்டுகளுக்குக்கு முன்பு
ஸ்ரீ ரங்கத்தில் இறைவன்
எழுதிய கவிதை ஒன்றின்
பிறந்த நாள் இன்று
இறைவன் படைத்த கவிதையை
இறைவன் எடுத்து கொண்ட பொழுதிலும்
அந்த கவிதை படைத்த
கவிதைகள் யாவும்
நம்மோடு இன்றும் விளையாடி
கொண்டுதான் இருக்கிறது
தாலாட்டு தொடங்கி
இறுதி சடங்கு வரை
அனைத்திற்கும் பாடல்கள்
எழுதிய தூரிகை
பாண்டவர் பூமி
கிருஷ்ண விஜயம்
அம்மா
பொய்கால் குதிரை
என் இன்னும் எத்தனையோ
படைப்புக்களை
எதுகை மோனையுடன்
யதார்த்தமாய் வரைந்து
மறைந்தது
நாசிகளால் சுவாசிக்க
மெய்யில் புதைந்திருப்பது பொய்
காதலில் மறைந்திருப்பது காமம்
பக்தியில் ஒழிந்திருப்பது அச்சம்
ஆண்மையில் கலந்திருப்பது பெண்மை
நிலத்தடியில் நிறைந்திருப்பது நீர்
நிஜங்களை பொய்ப்பது கனவு
இயற்க்கையின் இணக்கங்கள் இவை
இவற்றோடு நாமும் இணங்கி தான் பார்ப்போமே ?