ஒரு கவிதையின் பிறந்த நாள்
கவிதை என்பது
மானுடம் மட்டுமே எழுதுவது என்று
யார் சொன்னது
கடவுளும் கவிதை எழுதி
கண்டதுண்டா
65 ஆண்டுகளுக்குக்கு முன்பு
ஸ்ரீ ரங்கத்தில் இறைவன்
எழுதிய கவிதை ஒன்றின்
பிறந்த நாள் இன்று
இறைவன் படைத்த கவிதையை
இறைவன் எடுத்து கொண்ட பொழுதிலும்
அந்த கவிதை படைத்த
கவிதைகள் யாவும்
நம்மோடு இன்றும் விளையாடி
கொண்டுதான் இருக்கிறது
தாலாட்டு தொடங்கி
இறுதி சடங்கு வரை
அனைத்திற்கும் பாடல்கள்
எழுதிய தூரிகை
பாண்டவர் பூமி
கிருஷ்ண விஜயம்
அம்மா
பொய்கால் குதிரை
என் இன்னும் எத்தனையோ
படைப்புக்களை
எதுகை மோனையுடன்
யதார்த்தமாய் வரைந்து
மறைந்தது
நாசிகளால் சுவாசிக்கும்
மனிதர்களுக்கு மத்தியில்
பேனாவால் சுவாசித்த
அந்த பெருந்தகை
மண்ணை விட்டு பிரிந்தாலும்
மண்ணில் உதிர்த்த
காவிய கவிஞன்
வாலி அவர்கள்
கடந்து சென்ற
கவிதை பாதையில்
நடந்துவரும் என்னை
போன்ற எளியவர்களின்
அன்பு பிறந்த நாள்
வாழ்த்துக்கள்
எங்கள் பயணங்கள் யாவும்
தங்கள் பாதையில்