கவித்துளிகள் - 2
வியர்வையின் தீவிரம்..
சரியும் வெட்டிய மரம் ...
விலகும் கருப்பு மேகம்...
****************************************************
அலகு விரியத் துயிலும் குஞ்சுகள்
பறக்கக் காத்திருக்கும் தாய்ப் பறவை
கிழக்கு நோக்கி
*****************************************************
உதகையில் வாங்கின கம்பளிச்சட்டை
பெட்டியைத் திறந்து எடுக்க வேண்டும்
நேற்றிலிருந்து டெங்கு
******************************************************
பரண்மேல் ஒட்டடை அடிக்க
கீழே விழுகிறது எட்டாம் வகுப்பின்
கட்டுரை நோட்டு
*******************************************************
வாகனங்கள் ஓய்ந்த இரவு
முகமுயர்த்தும் முழுநிலவு
சாலையைக் கடக்கும் தவளை
************************************************************