சொல்லுவதெல்லாம் பொய்

சொல்லுவதெல்லாம் பொய்தான்
ஆனாலும் கவிதை !
செய்வதெல்லாம் பளுதான்
ஆனாலும் கடமை !
வானமெல்லாம் நீலம்தான்
ஆனாலும் கருமுகிலே இனிமை !

கற்பதெல்லாம் பாடம்தான்
வாழ்க்கைபோல் ஆகுமா ?
காண்பதெல்லாம் காட்சிதான்
இயற்கைபோல் ஆகுமா ?
பூப்பதெல்லாம் மலர்கள்தான்
செண்பகம் மல்லிகையாகுமா ?
நீர்வீழ்ச்சியெல்லாம் அருவிதான்
ஒரு குற்றாலம் ஆகுமா ?
ஓடுவதெல்லாம் ஆறுதான்
கங்கை காவிரி நிகர்க்குமா ?
ஒலிப்பதெல்லாம் மணிகள்தான்
ஆலயமணியின் ஓம் எனும் ஒலி ஆகுமா ?
உதயங்கள் எல்லாம் எல்லோருக்கும் விடியல்தான்
அது உனக்கு உனக்காக விடியும்போதுதான் !

~~~கல்பனா பாரதி~~~

எழுதியவர் : கல்பனா பாரதி (29-Oct-15, 9:27 am)
பார்வை : 86

மேலே