டூடூ டூடூ
நீ வெறுங் கூடு
உனக் கெதற்கு வீடு
ஊரெங்கும் ஓடு
உனதென்ன தேடு
நல்லதையேப் பாடு
நாணமின்றி ஆடு
அழிக்காதே காடு
அத்தனையும் கேடு
நீ நல்ல மாடு
போதாதா ஒரு சூடு
துயர்கண்டால் சாடு
துரத்திட நீ ஓடு
உறுதியாய் நாடு
உனக்குண்டு பாடு
கட்டாதே வேடு
காலம்போனால் கேடு
ஒன்றுபட்டுக் கூடு
உயர்ந்திடும் நாடு
போனால் சுடுகாடு
போய்விட்டால் ஏது மறுவீடு!