பிறந்தநாள் வாழ்த்துகள்

எத்தனையோ வேதனைகள்
எனக்குள் இருக்க- என்னை
உருட்டிப்போட்டு உயிர்த்தெழவைக்கும்
உன் நினைவுகள்.

ஒரு ஓரமாய் நின்றிருந்த என் இதயம்
உன்னை பார்த்த நாள் முதலாய்
ஏனோ பாரமாகிப்போனது.

காயம் இல்லாமலே வலி கொடுக்கிறாய்.
நினைவுகளாலேயே சுகம் கொடுக்கிறாய்.

என்ன ஆனது எனக்கு?
என்னுயிர் ஏன் வற்றிப்போனது?

எங்கெனும் எங்கெனும் உன் உருவம்..
உன் அழகு...

பணியிடையில் கணினிக்குள் நீ..

படுக்கையிலும் பக்கத்தில் நீ..

உணவு இடைவேளையிலும்
ஒரு வாய் ஊட்டச்சொல்லி
எதிர்ப்புறத்தில் நீ...

உறக்கத்தின் கனவுகளாய் நீ...
உறங்காத விழிகளின் இரவுகளாய் நீ...

என்ன செய்தாயடி கண்னே..
என்னை என்ன செய்தாயடி.

உன் இதழ் தந்த முத்தம்
என் இதயம் வரை இனிக்கிறது-

உன்னை இறுக்கி அனைத்த
அந்த கனத்தில்
இறந்து பிறந்தது என் உயிர்.

என் விரல்களால்
உன் அங்கங்களை
அழுத்திய அந்த இன்ப நொடிகள்தான்
இன்றும்
என் விடியல்களின்
வெளிச்சக்கீற்றுகள்.

காண்பேனோ என் அழகே..
மீண்டும் ஒருமுறை காண்பேனோ..

என் கைகளின் நடுவே-
இடைவெளியின்றி என்னை
இறுக்கி அனைத்திட...

இதழ் பதித்து உன் மூச்சுக்காற்றினை
என் உயிரில் நுழைத்திட-

உன் மடி உறங்கி
மீண்டும் நான் ஒரு குழந்தையாகிட -

காண்பேனோ என் அழகே..

ஆறாம் ஆண்டில் அடிவைக்கும்
என் அழகு பிரபஞ்சமே..

இதயம் நிறைந்த
இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்

எழுதியவர் : (29-Oct-15, 12:07 pm)
சேர்த்தது : அப்துல் Rahman
பார்வை : 64

மேலே