வாழ்க்கை சவாரி
வாழ்க்கை எனும் கருவறை,
நம்மை சிறைகொள்ளும் உள்ளிருக்கும்வரை !
உடல் எனும் குதிரையேறி, மனம்போகும் சவாரி
அது!
உண்மைகளை உணர்த்தும், பல பாதைகள் மாறி !
இலக்கை நோக்கிய பயணம்,
இதனிடையே நம் வாழ்வியல் தருணம்
வாழ்க்கையும் வளம்பெறும்,
அதில் சோதனைகளும் இடம்பெறும்.
உன்,
அச்சம் என்ற பலகீனம்,
நீ,
துச்சம் என்றதும் பலமாகும்,
பின்,
உச்சம் உனது உணர்வாகும்.