வினா அறியும்முன்

என் அகம் காணும்முன்,
பன்முகம் கொண்டேன்!
காதல் அறியும்முன்
காமம் கொண்டேன்
ஆண்மை அறியுமுன்,
பெண்மை புறிந்தேன்!
விதைக்குமுன் (மரம்/மனம் )
நிழல் (அதன்/உன்) கண்டேன் !
வினா அறியுமுன்
விடை கண்டேன்!
தந்தைமனம் தவழும்முன்
பிள்ளைகுணம் அறிந்தேன்!
காண்பதை அறியுமுன்,
காலம் கடந்தேன் !
கதை புரியுமுன்,
முடிவை உணரந்தேன்.