எனக்காக

காற்று வீசும் வேளையில்
மலர்கள் சிந்தும் தேனும்
என் மாது அவளின் இதழோரம்
சிந்தும் மதுவும் ஒருவகையில்
போதையா........?! இல்லை
அதனை உணர்ந்ததால்
நான் மேதையா......?!!,
போதை கொண்டதால் உச்சம்
அடையவில்லை
அதனால் நான் போதிதர்மனும் இல்லை
ஆனால் போதித்து வருகிறேன்!
புன்னகையில் பேசிய
உன் வார்த்தைகளை!!,
நிதானம் என்பது இதுவரை
எனக்கு இல்லை
இருந்தும் அதனை நீ தந்தாய்
எனக்காக...................
..........................................................