பனையே

ஓங்கி வளர்ந்த பனைமரமே
உன்கதை யென்றும் உயர்வேதான்,
தாங்கிப் பிடிப்பாய் நிலத்தினையே
தங்கிடச் செய்வாய் நிலநீரை,
ஈங்கிலை உனக்கே யீடாக
எல்லா உறுப்பும் பயன்தானே,
ஓங்கிய சிறப்புடை உன்னையுமே
ஒழித்திட நிற்கிறார் வேதனையே...!

எழுதியவர் : செண்பக ஜெகதீசன்... (30-Sep-19, 7:00 pm)
சேர்த்தது : செண்பக ஜெகதீசன்
பார்வை : 77

மேலே