முகம்
உன் முகதத்தை நூலாக்கி
என் பார்வை ஊசிக்குள் நுழைத்துக்கொள்ள ஆசை
உனது நான்கு புலன்கள் அடங்கிய முகத்தில்
எனது ஐம்புலன்கள் அடங்கியுள்ளதால்தான
என் நாற்திசைகளை
செவ்வன வழி நட்த்திச் செல்கின்றன பஞ்சபூதங்கள்
அஸ்தமிக்கும் நேரத்தை நோக்கிய நிலவின் பயணம்
தூக்கக் கலக்கத்தில் உன் முகம்
குளுமையுறவேண்டும் என்பதற்காகவே
விரும்பி வந்து உன் முகத்தில் வீசும் வெயிலால்
மேலும் வசீகரமாகும் உன் முகம்
பிடிக்கப்படும் குடை பிடிவிட்டுப் பறக்கும் அளவுக்கு
காற்றை உரத்து வீச ஏவலிடுகிறது மழை
உன் முகம் நனைக்க