காதல்...சில குறிப்புகள்...சில நினைவுகள்...

*விழி பேசும்

மௌன மொழி - வெளிப்படுமே

இதயம் வழி...


*யாருக்கும் புரியாத

என் கவிதை

உனக்குப் புரிந்தது.

உனக்குப் புரிந்ததால்

அனைவர்க்கும் புரிந்தது.

புரிந்தது

என் கவிதையல்ல!

நம் கவிதை...


*காத்திருத்தல் சுகம்

யாருமற்ற தனிமையில்

உனக்கான காத்திருப்பு

மிக சுகம்...

எழுதியவர் : தோழன் (1-Aug-10, 1:05 am)
பார்வை : 759

மேலே