தனிமை
பனிபடர்ந்த அதிகாலை வெளிச்சத்தில் நின்று கொண்டிருக்கின்றேன்;
தனிமையில் புதிதாக தூவிய பனிப்பூக்களில் பதிந்த என் கால்சுவடுகளோடு....
நிசப்தம் என் காதுகளில் ஒலிக்கிறது.
என்னோடு நான் நெருக்கமாகிக்கொண்டிருக்கின்றேன்;
மையத்தை அடைந்த போது,
அது கிட்டத்தட்ட வலிக்கிறது!