நிசப்தம்
காடுகளில் நிசப்தம் விசித்திரமானது
அங்கே ஒலிகளுக்கு எப்போதும் குறைவில்லை
வெறுமைக்கும் அச்சத்திற்கும் கூட;
இப்படித்தான் மூடப்பட்ட அறைகளுக்குள்ளும் இருக்கும்
நீ கேட்பது காற்றில் அசையும் மரங்களின் மென்மையான சிற்றலை,
கீச்சிடும் குருவியிடமிருந்து வரும் எதிர்பார்ப்பு ஒலி
அதனோடு காய்ந்த மரக்கட்டையில் மரங்கொத்தி எழுப்பும் மேளதாளம்
ஆனாலும் இவையனைத்தின் ஒருங்கிணைந்த கூட்டு;நிசப்தம்,
ஓர் பேரமைதி செவிப்பறைகளுக்குள் ஊடுருவி
விளக்கிலிருந்து ஒளிரும் தீச்சுடர்போல்
உன் வாழ்க்கையை ஒளிரச் செய்கிறது!