இலையின் நுனியில்

கடிகார முள்ளும் காதலுற்று மெதுவாய் சுற்றும்
நீ என் அருகிருக்கையில்..
கல்லும் காதல் வந்தால் சிலையாகத்தானே வேண்டும்,
நான் பூமி, எனக்கு நீ நெப்டியூனில் பெய்யும் வைர மழை ஆனாயே..
மேகங்கள் சற்று ஓய்வெடுக்க உன் தலையனைக்க வருமே இரவில்..
உன் நிழல் பட்டு சூரியனில் பனிகாற்று வீசுமே ஏன்?
மழை பொழிந்தாலும் ஆச்சர்யம் இல்லயே..
ஆன் சிங்கம்கூட பிடரியை பின்னி விட சொல்லும் உன் விரல் படர ஆசைப்பட்டு..
உன் சுவாசத்தால் ஆக்‌ஷிஜனும் உயிர்பெருமே..
நான் தினமும் சூடிக்கொண்ட குறிஞ்சிப்பூ நீ
தண்ணீரில் தீருமா காதலின் தாகம்
மோகத்தில்தானே..
பச்சிலையின் நுனியில் ஒருசொட்டு
மழைநீர், என்னை பிரியத்தான் போகிறாயா ? இலையின் மனதில்
முல்காம்பில் நூல் கோர்த்து இதயத்தில் சூட்டினாயே..
குடைபிடித்திருந்தும் ஈரமானது என் இதயம், காதல் நீரில் நனையவைத்த அவள்.. கலங்கிய கண்ணீரில் கரையவைத்துவிட்டாலே......

எழுதியவர் : சங்கீத் ஜோனா (6-Nov-19, 1:29 pm)
சேர்த்தது : சங்கீத் ஜோனா
Tanglish : ilaiyin nuniyil
பார்வை : 146

மேலே