எங்கு சென்றாய் நீ

வீதியில் யாவரும் நீயாகவே என் கண்களுக்கு
கேட்கும் குரலெல்லாம் உன் குரல் போலே
பசி வயிற்றில் உணவில் நாட்டமில்லை
இசை இனிமை ஏனோ எட்டவில்லை
நண்பரின் சேட்டைகள் ரசிக்க நாட்டமில்லை
அட்டை போலே நீயும் உன் நினைவும்
என்னிலே ஒட்டிக் கொண்டே கிடக்கின்றதே
"காத்துக் கிடப்பதில் இன்பமுண்டு
காக்க வைப்பதில் சுகமுண்டு"
ஒரு கவிஞன் பாடினான்
இது சுகமா? சோகமா?
எனக்கு புரியவில்லையே

அஷ்றப் அலி

எழுதியவர் : ala ali (1-Dec-19, 2:13 pm)
சேர்த்தது : அஷ்றப் அலி
Tanglish : engu senraai nee
பார்வை : 323

மேலே