இதழால் தேன் சிந்தினாள்

சில்லென்ற மழை
மார்கழிக் காற்று
புன்னகைப் பூக்கள்
முகத்தில் சிந்த
அருகே வந்து நின்றாள்
இருவரின் திருமணத்
தேதி சொன்னாள்
பெற்றோர் சம்மதச்
சேதி சொன்னாள்
அமிர்த அடை
கசிந்து வழிந்து
அவள் இதழ் முகட்டில்
மினுங்கலாய்த் தெரிய
அவன் இளமை உடலில்
முறுக்குகள் தெறித்தன
குறுக்காய் அள்ளி எடுத்து
அங்கு சிந்தும் தேனை சிதறாமல்
கொஞ்சம் கொஞ்சமாய்
உறுஞ்சி எடுத்தான்
போதை மயக்கம்
நாற் கண்களையும் தழுவ
சுற்றம் மறந்தனர்
அருகில் ஆற வைத்த
அவர்கள் உணவை
பூனை வந்து
சுவைத்து முடித்தது அறியாமல்
நேரம் அங்கு கரைந்து
கொண்டே சென்றது
அஷ்றப் அலி