வீணையடி

வீணையடி..
======================================ருத்ரா

வீணையடி நீ எனக்கு.
மேவும் விரல் நான் உனக்கு.
பாரதியின் பாட்டு சுகமானது.
ஆனால்
இங்கே பெண் எனும் வீணை
விறகு ஆனது அடுப்பின் முன்.
பெண் எனும் பண்
புண் எனப்பட்டது
ஆண்டவன் சன்னிதானத்தில்.
ஆதிக்கப்பேயே!
புதையட்டும் என நீ
விட்டாலும்
புயல் அது ஆகிவிடும்.
அப்போது
உன் கல் தெய்வங்கள்
தூள்..தூள்.. தூள்.. தான்.

=============================================

எழுதியவர் : ருத்ரா இ பரமசிவன். (1-Dec-19, 12:02 pm)
பார்வை : 72

மேலே