அந்தப் பேரை வைக்காதடி

அம்மா, நீ ஆசைப்பட்ட மாதிரியே அழகான ஆண் கொழந்தை பொறந்திருக்கிது..என் வீட்டுக்காரர் எல்லைக் காவல் படையில அதிகாரியா இருக்கிறதால மூணு மாசம் கழிச்சுத்தான் வரமுடியும்னு சொல்லிட்டாரு.
@@@@@
ஆண்டவன் புண்ணியத்தில உனக்கும் செலவே இல்லாம அரசாங்க மருத்துவமனையில பையன் ஆம்பளப் பையன் பொறந்துட்டான். சரி, மாப்பிள்ளை நல்லா இருக்கறாரா?
@@@@@@
ரொம்ப சந்தோசமா இருக்கறாரும்மா. கொழந்தைக்கு 'சிரஞ்சீவி'ன்னு பேரு வைக்கச் சொன்னாரும்மா.
@@@@@@
ஏன்டி கண்மணி, என்ன சொல்லற? அந்தக் கொலகாரப் பேரையா எம் பேரனுக்கு வைக்கச் சொன்னாரு உன்னோட வீட்டுக்காரரு?
@@@@@
'சிரஞ்சீவி'ங்கறது கொலைகாரப் பேரா? என்னம்மா சொல்லற?
@@@@@@@
ஏன்டி கண்மணி, பேருந்துல போறபோது பயணிகள் பாதுகாப்புக்கு என்ன எச்சரிக்கையை எழுதி வச்சிருக்காங்க?
@@@@@
'கரம், சிரம், புறம் நீட்டாதீர்'
@@@@@
நீ படிச்சவதானே! அந்த எச்சரிக்கைக்கு என்ன அர்த்தம்னு தெரியுமா உனக்கு?
நான் அஞ்சாம் வகுப்பு படிச்சவ. நீ பட்டதாரி.
இப்பச் சொல்லு?
@@@@@
'கரம்'னா கை. 'சிரம்'னா தலை. 'புறம்'னா வெளிப்புறம். கை, மற்றும் தலையை பேருந்திலிருந்து வெளியே நீட்டக்கூடாது..
@@@@@
'கரம்'னா கை. 'சிரம்'னா தலை. 'சீவு', 'சீவி' 'சீவினான்'. இப்ப இரண்டு சொற்களையும் கூட்டிப்பாரு. சிரம் + சீவி = சிரஞ்சீவி.
@@@@@
'சிரஞ்சீவி'க்கு என்னடி அர்த்தம்?
@@@@@@@
'தலையைச் சீவி'ன்னு அர்த்தம்மா.
@@@@@@
இப்பச் சொல்லு. எம் பேரனுக்கு 'சிரஞ்சீவி'ன்னு பேரு வைக்கிறது சரியா?
@@@@@
அய்யோ அம்மா, அந்தப் பேரு வேண்டவே வேண்டாம்மா. என் பேரு கண்மணி..அவுரு பேரு செல்வம். எஞ் செல்லத்துக்கு 'செல்லமணி'ன்னு பேரு வச்சுருலாம் அம்மா.
@#@@@
நீ சொல்லறதுதான்டி சரி. "செல்லம், செல்வமணி". பாரு எம் பேரன் என்னையே பாக்கறான்.
■■◆■■■■■■■■■■■■■■■■■■■■■■■
Chiranjeevi = deathless, immortal, eternal, without death.
◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆
தமிழ்ப் பெயர்கள் தமிழரின் அடையாளம்

எழுதியவர் : மலர் (5-Dec-19, 8:01 pm)
சேர்த்தது : மலர்91
பார்வை : 207

மேலே