நங்கை - ஆபால்

ஏன்டா ஆபாலு, உம் பொண்ணுக்குப் பேரு வச்சிட்டயா?
@@@@@
இல்லஙக பெரியம்மா.
#@@@@@@
உங்க அய்யன் (அப்பா{கொங்குத் தமிழ்ச் சொல்}) தமிழ்ப் பற்று அதிகம் உள்ளவரு. நம்ம பண்ணையில வளக்கிற ஆடு, மாடுமேல அதிக அன்பு காட்டுவாரு. உனக்கு ரண்டு வயசா இருக்கிறபோது அவரும எந் தங்கச்சியும் ஒரு விபத்தில தவறிட்டாங்க. நான் உன்னப் பொத்திப் பொத்தி வளத்தேன். உனக்கு அவுரு வச்ச பேருதான் ஆபால்.
@@@@@@
அதெல்லாம் எனக்கு பலதடவை சொல்லிருக்கிறீங்க பெரியம்மா. உங்களுக்கும் கொழந்தைப் பொறப்பு இல்ல. என்னச் செல்லமா வளத்து பத்தாம் வகுப்பு வரைக்கும் படிக்கவச்சு மங்கையை என்னக்குக் கல்யாணம் பண்ணி வச்சீங்க.
சரி. நீங்க என்னவோ கேட்டீங்களே?
@@@@@
அக்காம்டா மறந்தே போச்சு. போன வாரம் மங்கைக்கு பொட்டப்புள்ள பொறந்துச்சே அதுக்கு என்ன பேரு வைக்கிறதுன்னு முடிவு பண்ணீட்டீங்களா?
@@@@@@@
ஆமாம் பெரியம்மா. எம் பொண்ணுக்கு 'நங்கை'ன்னு பேரு வைக்கலாம்னு இருக்கிறோம்.
@@@@@@
என்னது, 'நங்கை'யா? அட ஆபாலு, சேலத்துப் பக்கம் நாஞ் சினப்னப் புள்ளயா இருக்கிறப்போ 'அண்ணி'யைத்தான் நங்கைனு சொல்லுவாங்க. அதுக்கு வேற அர்த்தம் வேற என்ன இருக்குதுன்னு தெரியாது. சரி, சரி. பரவால்லடா ஆபாலு. மங்கை பெத்த பொண்ணு 'நங்கை'. நல்லா இருக்குதடா மவனே.
@@@@@@
பெரியம்மா, இந்தப் பேரு தமிழ் 'நங்கை' இல்லை. இந்தி 'நங்கை:.
@@#@@@@
இப்பத்தான் காலம் மாறிப் போச்சு. தமிழர்கள் தமிழ்ப் பேருங்கள வைக்கிறதை கேவலமா நெனைக்கிற காலம்.
@@@@@@@
ஆமாம் பெரியம்மா.
@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@
Nangai = cultured lady.
ஆ = மாடு + பால் = ஆபால். ஆவின் பால்
நங்கை= a lady, a woman of quality or distinction. பெண்ணிற்சிறந்தாள்.
Winslow
A Comprehensive Tamil and English Dictionary. 1992. முதல் பதிப்பு 1862.
Asin Educational Services
New Dellhi * Chennai. பக்கம் 942.
####################################
தமிழ்ப் பெயர்கள் தமிழரின் அடையாளம்
@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@
நங்கை என்ற சொல் தமிழிலிருந்து வடமொழிக்குச் சென்ற சொல்லாக இருக்கும். 'ஊர்' என்ற சொல் 'கான்பூர், கராக்பூர், நாக்பூர் என்ற ஊர் பெயர்களில் உள்ளது. அது போல 'அசல்' :நகல்' என்ற சொற்கள் தமிழ்ப்படுத்தப்பட்ட வடமொழிச் சொற்கள். 'சாதி' 'ஜாதி' என்ற வடமொழிச் சொல்லின் தமிழாக்கம்.(இதை கூகுலில் பார்க்கவும்.

எழுதியவர் : மலர் (10-Dec-19, 9:58 pm)
சேர்த்தது : மலர்91
பார்வை : 131

மேலே