கருவிழியால் நீ எழுதும் கவிதையை
கண்களை இங்குமங்குமாய் அசைத்து
கருவிழியால் நீ எழுதும் கவிதையை
கணினித் திரையில் நானெழுதினால்
கணினியும் உன்மேல் காதல் கொள்ளும்
காதல் பொறாமையால்
ரோபோடிக் வில்லனை படைத்து
எனக்கெதிராய் அனுப்பிவிட்டால் நான் என்செய்வேன் ?
அப்போது வந்து
உன் விற்புருவம் வளைத்து என்னை காத்திடுவாய்
காதல் மாகாளியே !

