மிரட்டும் அழகு

நான் கொடுத்த கவிதைகளை
உன் தோழிகளிடம்
காட்டிக்கொண்டிருக்காதே

உன் அழகின் தாக்குதலில்
மிரண்டு போயுள்ள அவர்களால்
உன் அழகை மேலும் அழகாக்கும்
என் கவிதைகளை
ஒப்புக்கொள்ள இயலாது

எழுதியவர் : (28-Feb-20, 2:45 pm)
சேர்த்தது : மன்னை சுரேஷ்
Tanglish : mirattum alagu
பார்வை : 52

மேலே