முதல் காதல் 🌹
முதல் காதல் 🌹
முதன் முதலாக மலரின் இதழ்களை விரல்களால் வருடிய சுகம்.
முதன் முதலாக கடல் அலைகளில் கால் நினைத்த சுகம்.
கோடை வெய்யிலில் குடிசையில் நுழைந்து மண்பானை தண்ணீரை தாகம் தீர குடித்த சுகம்.
தடபுடலான விருந்தாக இருந்தாலும், கடைசியில் பால் பாயாசம் அருந்திய சுகம்.
உடல் நலன் சரியில்லா சமயம் அன்னையின் மடியில் தலை வைத்து தூங்கிய சுகம்.
மொட்டை மாடியில் கட்டாந்தரையில் படுத்து
அண்ணாந்து வானத்து நட்சத்திரங்களை ஒவ்வொன்றாக என்னும் சுகம்.
பாவாடை தாவணியில்
அழகு பெட்டகமாய்
இளமை குவியலாய்
பூவை அவளை பார்த்த
என் கண்கள்
அவளையே நோட்டமிட்டது
எப்போதும் அவளையே
நினைத்தது
இனம்புரியா இன்பம்
உடல் முழுவதும் பரவியது
மனம் எந்நேரமும் அவளை நினைத்து பரவசம் அடைந்தது
ஏதோ ஒன்று அவளிடம் சொல்லாமல் தொண்டை குழியில் சிக்கி தவித்தது.
கடைசி வரை காதலை அவளிடம் சொல்ல தயங்கியது.
முதல் காதல்
தோல்வியும் இல்லை
வெற்றியும் இல்லை
மறக்கவும் முடியவில்லை.
- பாலு.