தனிமை👤
தனிமை👤
தனிமை அது முதலில் மிகவும் கொடுமை.
பழக, பழக அது இனிமை.
தன்னை பற்றி அறிய ஒரு சந்தர்ப்பம்.
தன் தவறை திருத்தி கொள்ள மிக பெரிய வாய்ப்பு
தன்னை ஆராய தனிமை மாபெரும் வரபிரசாதம்.
எவ்வளவு ஆனவமாக மற்றவர்களிடம் நடந்து கொண்டேன்.
எவ்வளவு அலட்சிய போக்கை பல சமயங்களில் பலரிடம் கடைபிடித்தேன்.
நான் செய்ய வேண்டிய வேலை மற்றவர்களிடம் சமர்பித்தேன்.
மிக எளிதாக, என் முதுகை பாராமல் மற்றவர்களிடம் நிறைய குற்றங்களை கண்டுபிடித்தேன்.
வானத்தில் இருந்து குதித்தவன் போல் எவ்வளவு பேருக்கு அறிவுரை என்ற பேரில்
அவர்களை மட்டம்தட்டி பேசினேன்.
இப்போது புரிகிறது
நான் எவ்வளவு திமிர் பிடித்தவன் என்று.
எவ்வளவு சுயநலகாரன் என்று.
எவ்வளவு பிடிவாத குணம் உள்ளவன் என்று.
என்னுள் இவ்வளவு அழுக்கா என்று
என்னை ஆராய தொடங்கி விட்டேன்.
இந்த தனிமை என்னை
மீண்டும் ஒரு முறை புதியதாக பிறக்க வைத்துள்ளது.
மானசீகமாக நான் தினம் ஆரம்ப பள்ளிக்கூடம் செல்கிறேன்.
ஒழக்கம் என்பது தவறு செய்யாமல் இருப்பது மட்டும் அல்ல
அது சக உயிர்களை தன் உயிரை விட மேலாக நினைக்க செய்வது என்பது புரிய தொடங்கி உள்ளது.
அன்பு என்பது தனக்கு பிடித்தவர்களிடம் மட்டும் செலுத்துவது அல்ல
இறைவனால் படைக்க பட்ட அத்துனை உயிர்களின் மீதும் பாகுபாடு இல்லாமல் செலுத்தும் மிக பெரிய ஆயுதம் தான் அன்பு என்று.
என்னால் என் வேலைகளை முழுமையாக செய்ய முடிகிறது.
எனக்குள் உள்ள திறமை எனக்கு புரிகிறது.
என் சோம்பேறித்தனத்தை தினம் முறியடிக்க புது, புது வேலைகளை வகுத்த கொள்கிறேன்.
என் பலம் என்ன பலவீனம் என்ன அனைத்தும் அளவு பார்க்க முடிகிறது.
யாரையும் எளிதில் பரிகாசம் செய்ய கூடாது.
யாரையும் எளிதில் உதாசினபடுத்தி பேசக்கூடாது.
யார் மனதையும் புண்படுத்த கூடாது.
முயன்றவரை மிக எளிமையான வாழ்க்கை வாழவே இனி ஆசை.
நல்ல இசையை கேட்க ஆசை.
ஆழ்மனம் கூறும் கருத்தை கவனமுடன் கேட்கவே இனி ஆசை.
தாமரை இலைமேல் தண்ணீர் போல் வாழவே ஆசை.
முற்றிலும் முழுவதுமாக
இயற்கையுடன் கைகோர்த்து செல்லவே வாழும்வரை ஆசை.
- பாலு.