தென்றல்

மாலை பொழுதினிலே

மதி மயக்கும் பொழிவினிலே

என்னுள் நீ உரையாடினாய்

எனை அறியாமல் நானும்
உறவாகினேன்

உன் மெல்லிய தீண்டல்களில்.....

பொன் மேகங்கள் மட்டுமல்ல

மென் தேகங்களும் சிலிர்த்தன

உன்னை வினவத்தான்
விரும்புகிறேன்

விரும்பி நினைத்தும்
விளையவில்லை

விளக்க முடியா தென்றலே.....

உன் உயிர் மெய்யினை உலகுக்கு உணர்த்தாத நீ...

என் உணர்வுகளில் கலந்தது தான் ஏனோ?

எழுதியவர் : சுவாதிகுணசேகரன் (21-Apr-20, 11:23 pm)
Tanglish : thendral
பார்வை : 234

மேலே