வரிகள் வென்ற பரிசு

என் ஓவிய காட்சியில்
விசிட்டர் புக்கில்
நீ எழுதிய விமரிசன
வரிகளை
ஒரு ரசிகனின் வரிகள்
என்று ஓவியமாக்கி
காட்சியில் மாட்டி வைத்தேன்
என் சித்திரங்கள் எல்லாம்
விற்றுப்போயின
நன்றியுடன் உனக்காக
இந்த ஓவியப் பரிசு
என்ற குறிப்புடன்
ஒரு ஓவியம் வந்தது
அந்த வரிகள் :
கோடுகளும்
வண்ணங்களும்
கலையும்
இறைவன்
உன்னக்கு
அளித்த பரிசு
உன் ஒவ்வொரு
ஓவியமும்
அளிக்கப்பட வேண்டிய
பரிசு
கவின் சாரலன்