குழந்தையின் சிரிப்பு
கள்ளமில்லா சிரிப்பு
குழந்தையின் சிரிப்பு
இப்படித்தான் கடவுள்
சிரிப்பும் இருந்திருக்கணும்...
சித்திரக்காரர் தீட்டிய
சின்னக் கண்ணன் சிரிப்பு
சிந்திக்கவைத்தது
குழந்தையின் சிரிப்பு
தந்தது எனக்கோர் தாக்கம்
என் மனத்தைக் கேட்டேன்
நான்...' குழந்தையாய் இருக்கையில்
நீயும் இப்படித்தான் சிரித்திருப்பாய்....
எனக்கு ஞாபகம் இல்லை அது
அம்மா சொல்வாள் ;'ஐந்து
வயதுவரை குழந்தையும் தெய்வமும் ஒண்ணுனு'
மீண்டும் எனக்குள் நான்
' அந்த குழந்தையின் சிரிப்பு
உன்னுள் இன்று இல்லையே ஏன்.... ஏன்
அந்த சிரிப்புதான் என்னை மறந்ததோ
என்னுள் எங்கோ மறைந்துகொண்டதோ...
இல்லை என்னை விட்டே போய்விட்டதோ...?
பரிணாம வளர்ச்சியில் அழிந்ததோ..
அப்படி இருக்காது ....
எங்களூர் கோவில் பிராகாரத்தில்
'காஞ்சிப் பெரியவாள் படம்
பார்த்தேன் சிரித்த இன்முகத்தோடு
அந்த சிரிப்பில் குழந்தையின் சிரிப்பு
கண்டேன், உள்ளம் தெளிந்தது...
கள்ளமில்லா நெஞ்சிருந்தால்
உடலும் உள்ளமும் சத்துவம்
நிரம்பி இருக்கும்....
சிரிப்பும் !
ரஜோ, தமோ குணங்களை
விட்டு விடுபடுவோம்
சத்வ குணம் வந்தடைய
உலகம் அமைதி பூகாவாகும் அப்போது
indr

