பெரியார் மண்

பெரியார் மண்

பாரதியை மிஞ்சிய சாரதி யாரடா ?
சூரரோ. அண்ணா பெரியாரும் --- வீரனோ ?
அண்ணா விடுதலை நாயகனா என்னசொல் ?
அண்ணா பெரியாரம் பக்

ஜெயிலுக்குப் போனசிவா வுக்கு பெயிலா
ஜெயிலில் தொழுநோய் வரவும் -- பெயிலென்று
பேசிடவும் கேட்டாரை ஏசியுள்ளேத் தள்ளினர்
பேசுமெவர் கும்சிறைவா சம்

விடுதலை வீரர் துடுக்காய் பேசி
எடுப்பார் எதிலும் முடிவை -- துடுக்கு
சிதம்பரத்தை ஆஷ்வாஞ்சி நாதனுடன் பொய்யாய்
கதைத்துசெக்கி ழுக்கவைத்தா ராம்

நாட்டு விடுதலைக்கு எந்தத் திராவிடர்
சூட்டுவியர் வையெங்கு சிந்தினார் -- பூட்டுநீ
பூதமாக்கும் வித்தையை சோத்துக்கேங் கும்நீயும்
சோதாவாய் பேச்சுவீர னாம

நூறுபோ ராட்டவீரர் பேர்மட்டு மாமறைத்தாய்
சோறுபோட்ட வர்பெயரை வைத்தாயே -- மாறுதல்
நாறுமே ஊரூர் நகர்பால சாலையெல்லாம்
நாறுமவர் பேரேன்வை தாய்

பாரும் தமிழர்போல் யாருளார் சொல்லுமேநீ
பாரு திராவிடம் நாடாமே -- யாரு
பெரியார்கண் டாராம் அறிவித்தார் அண்ணா
விரித்திராவி டம்தமிழா சோல்

சிக்கென வும்கிளம்பி குக்காஸ்தி ரேலியாவை
லக்கியாகக் கைப்பற்றிப் பாதுகாக்க -- சொக்கினார்
வெள்ளைக்கொள் கையென அண்டையரைத் தள்ளினான்
கொள்ளைத் தவிர்த்தி டவும்


இசபெல்லா மீகான் கொலம்பஸ் நிசமாய்
இசபெல்லா சொற்படித் தேட -- பசபிக்
கடைசி அமெரிக்கா கண்டம் விடையாய்
கிடைத்தது வெள்ளையர் கும்


வாஸ்கோடா சுற்றியே அஸ்திரமாய் வாங்கவந்தான்
வாஸ்னா திரவியம் கேரளத்தில் -- வாஸ்தவம்பின்
வந்தசில ஐரோப்பி யர்செய்த தந்திரத்தால்
தந்தோம் முழுபா ரதம்



உயிர்ப்பணையம் தந்து உயிர்மீட்ட வாஸ்கோ
தயிர்கடையில் வெண்ணெய் எடுக்க -- தயிர்கடைந்த
அண்ணா பெரியாரின் மண்ணாம் திராவிட
மண்விரியா முன்தமிழ்நா டாம்



உழைத்தவன் எங்கோ கழைக்கூத்தன் யிங்கே
உழைக்கா பிடித்தானே ஆட்சி -- விழைந்து
பெரியாருட் கார பெரியநட்டு வாங்கம்
பெரியார் புராணமெல்லாம் பொய்

எழுதியவர் : பழனிராஜன் (29-Jun-20, 5:34 pm)
சேர்த்தது : Palani Rajan
பார்வை : 2310

மேலே