நகைச்சுவை துணுக்குகள் 17

எங்க குடும்பத்துலே நாங்க எங்க சொந்தத்துலேதான் கல்யாணம் பண்ணிக்கிற வழக்கம்.

ஓ! அப்படியா?

ஆமாம்.எங்க அம்மா எங்க அப்பாவைத்தான் கல்யாணம் பண்ணிக்கிட்டார். எங்க அண்ணன் என் அண்ணியைத்தான் கல்யாணம் பண்ணிக்கிட்டார். எங்க தாத்தா என்னோடே பாட்டியைத்தான் கல்யாணம் பண்ணிக்கிட்டார். ஏன்? நான்கூட என் பெண்டாட்டியைத்தான் கல்யாணம் பண்ணிக்கிட்டு இருக்கேன்.
***********
அஞ்சாவது தோசை சாப்பிட்டப்புறம்தான் என் பசியே அடங்கிச்சு.

நீ முதல்லேயே அந்த அஞ்சாவது தோையை சாப்பிட்டிருந்தீன்னா, உன் பசி
அப்பவே அடங்கி இருக்கும், இவ்வளவு பில்லும் ஆயிருக்காது இல்லே?
*********
ஏண்டா பொசுக்கிற வெய்யில்லே நிக்கறே?


வேர்வை காயறதுக்காக நிக்கறேன்.
**************
என்னங்க நீ தூத்துக்குடியா?


ஆமாம்.


அங்கே நீங்க முத்துக் குளிக்கிறதை பார்த்திருக்கீகளா?

முத்தா? அவன் யாரு? தெரியாமத்தான் கேக்கறேன். எங்கே எவன் குளிக்கிறான், எவன் குளிக்கல்லைங்கிறதைப் பார்க்கிறதுதான் என் வேலையா?

எழுதியவர் : ரா. குருசுவாமி ( ராகு) (7-Jul-20, 3:29 pm)
சேர்த்தது : ரா குருசுவாமி
பார்வை : 78

மேலே