சூழ்ச்சி பற்பல சுற்றமும் செய்திடின் - கட்டளைக் கலிப்பா
கட்டளைக் கலிப்பா
சூழ்ச்சி பற்பல சுற்றமும் செய்திடின்
..தூய எண்ணமும் நெஞ்சினில் கொண்டுதான்
காழ்ப்பு நீக்கியே மக்களும் வாழ்ந்தனர்;
..கள்ளம் விட்டபின் கன்னலாய் நின்றனர்;
தாழ்வும் இன்றியே தன்மையாய்க் கூறுவேன்,
..தண்மை பொங்கிடத் தன்னிலை சொல்லியே
வாழ்வில் யாவரும் இன்பமே பெற்றிட
..வாழ்த்தி வல்லமை பெற்றிடச் செய்வனே!