லிவி
சொலல்வல்லன் சோர்விலன்
அஞ்சான் அவனை
இகல்வெல்லல்
யார்க்கும் அரிது...
இக்குறளுக்கு இதுவரை
எழுதப்பட்ட உரைகளை
விடவும் சிறந்தது
லிவிங்ஸ்டன் எனும்
இனிய நண்பனின்
வாழும் முறை...
மான்கள் பிறந்தவுடன்
ஓடக் கற்றுக் கொள்ளும்...
லிவிங்ஸ்டன் கல்லூரியில்
சேர்ந்த நாள் முதல்
பாடங்கள் கற்றுக் கொண்டான்...
எல்லா மதங்களின்
கொள்கைகள் புரியும்...
பகுத்தறிவுக் கொள்கை
இவனது பிரியம்...
பதினேழு வருடங்கள்
போதுமானதாயிருந்தது
லிவிங்ஸ்டனுக்கு
நூறு வருடங்கள்
வாழும் முறைகள்
தெரிந்து கொள்ள...
திராவிட வரலாறுகள்
இவனுக்கு அத்துப்படி
இவனது எண்ணங்கள்
பெரியார் அண்ணா
வகுத்த கொள்கைப்படி...
படிக்கும்போதே
ஆசிரியன் போல்
தெளிவானவன்...
பணிபுரியும்போது
மாணவன் போல்
கற்பதில் ஆர்வமானவன்...
ரம்மி சீட்டு விளையாட்டில்
ஜெயிக்கும் போதெல்லாம்
இவன் படிப்பில்
கவனம் வைப்பானா
என்றும்...
தேர்வுகளில்
இவனது அருமையான
மதிப்பெண்கள் காண்கையில்
இவன் விளையாட்டுக்கு
உகந்தவன்தானா
என்றும்...
தோன்ற வைக்கும்
காரியத் தீவிரவாதி...
கடமை கண்ணியம்
கட்டுப்பாடு என்பதில்
இவனுக்கு என்றும் உண்டு
உடன்பாடு...
இவனது பணியில்
பெருமை கொள்ளும்
ஊர் நாஞ்சில் நாடு...
துறை... மாசுக்கட்டுப்பாடு...
அன்பு நண்பன் லிவிங்ஸ்டன்!
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
வாழ்க வளமுடன்!!
அன்புடன்...
ஆர். சுந்தரராஜன்.