முதலில் மனிதனாகு

அகிம்சையில் சென்ற அண்ணலாகு
இல்லை
ஆசையைத் துறந்த
புத்தனாகு

இயற்கையை நேசித்த
நம்மாழ்வாராகு
இல்லை
ஈகையில் சிறந்த
கர்ணனாகு

உண்மையேப் பேசிய
அரிச்சந்திரனாகு
இல்லை
ஊக்கத்தால் உயர்ந்த
அப்துல்கலாமாகு

எளிமையாய் வாழ்ந்த
காமராஜராகு
இல்லை
ஏழ்மையை விரட்டியடித்த
எடிசனாகு

ஐம்பொறி அடக்கிய
சித்தனாகு
இல்லை
ஒழுக்கம் ஓம்பிய
விவேகானந்தராகு

ஓதி உணர்ந்த
அம்பேத்கராகு
இல்லை
ஔவைப் போற்றிய
அதியமானாகு

இதுவாகு இல்லை அதுவாகு
எதுவாகினும்
முதலில் மனிதனாகு

#சரவிபி_ரோசிசந்திரா

எழுதியவர் : சரவிபி ரோசிசந்திரா (17-Aug-20, 8:38 pm)
பார்வை : 65

மேலே