மேல்மாட மலரே

----------------------
வண்ணம் தெளித்த
வாலிபன் எங்கே?
மென்மை தந்த
மேகங்கள் எங்கே?
மகரந்தம் காத்த
கருப்பை எங்கே?
இதழ்கள் அளந்த
வாமனன் எங்கே?
வாசனை வழங்கிய
திரவியன் எங்கே?
குளுமை கொடுத்த
கலாநிதி எங்கே?
உன் வாழ்நாள் குறுக்கிய
வஞ்சகன் எங்கே?
அவன் முகம் காட்டு
வாடா வரம் தர
வாதாடி பார்க்கிறேன்..
-- சாம். சரவணன்

எழுதியவர் : சாம்.சரவணன் (20-Aug-20, 11:22 pm)
பார்வை : 606

மேலே