தூரத்து காதல்

கண்ணும் கண்ணும் காணாமல்
இதயம் பேசும் மொழி அறிந்தேன் ...

என் கவலைகள் கூட காணாமல் போகிறது
உன்னிடம் சொன்னால் வருத்தப்படுவாய் என...

தனியாய் தங்கி
அரைகுறையாய் உறங்கி
குறைவாய் உண்டு
நிறைவாய் என்னை வாழவைக்கும் உயிரான உறவே

என் உயிரின் உருவம் நீ
நீயின்றி நானில்லை
நான் என்றாலும் உண்மையில் நானில்லை ...

எழுதியவர் : சுப்ரியா பாலசுப்ரமணியன் (4-Sep-20, 1:02 pm)
பார்வை : 140

மேலே