அவரவர் வழி

இறைவனை அடைய
சீடன் குருவிடம்
வழி காட்ட சொன்னான்,
வாய்மையை உணர்ந்த குரு
வாய் மூடி மௌனமானார்,
மீண்டும் வேண்டினான்
மௌனமாக இருந்தார் குரு

இறைவனைக் காணாமல்
சினம் கொண்ட சீடன்,
கதவுகளைத் தட்டினான்
கதவுகள் திறக்கவில்லை—“குருவே
இங்கு நான் இருப்பதில்
அர்த்தமில்லை அதனால்
விடை கொடுங்கள்” என்றான்

குரு சொன்னார் “ நான்
கதவுகளைத் திறந்து வைத்து
காத்திருந்தேன் மௌனமாக
குறை என்னிடமில்லை,
பாதம் இருப்பவர்க்கு
பாதையும் இருக்கிறது
இறைவனை அடைய
அவரவர் வழி அவரவர்க்கு

எழுதியவர் : கோ. கணபதி. (18-Sep-20, 8:27 am)
சேர்த்தது : கோ.கணபதி
Tanglish : avaravar vazhi
பார்வை : 63

மேலே