வண்ணத்துப் பூச்சி
மல்லிகைச்செடியின் மேல் வண்ணத்துப் பூச்சி
மல்லிப்பூவின் தேனை சுவைக்க சின்னஞ் சிறு
சிறுவன் வண்ணத்துப்பூச்சியை விரலிரண்டால்
பிடித்து பறக்க தவித்த பூச்சியைக்
கண்டு மகிழ்ந்து சிரிக்க செடியிலிருந்து
அவன் கையில் வந்து வீழ்ந்த கொள்ளிஎறும்பு
கடிக்க அவன்கை நழுவ பூச்சி
பறந்து போனது அவன் அழுதிட
அவன் இளமனதில் பள்ளியில் படித்தது
அந்த அழுகையிலும் ஞாபகத்தில் வந்தது
' வாய்யில்லாப் பூச்சியை துன்புறுத்தாதே
மீறினால் ஆண்டவன் அதைக் காப்பான்
உன்னை தண்டித்து'............
பறந்துபோன வண்ணத்துப்பூச்சி அவன் தோளில்
வந்திறங்கி, சிறகை விரித்து ஆடியது
பாவம் வாய்யில்லாப் பூச்சி தீயோன்
யார் என்பதை அறியாது அது