பூக்களின் புன்னகை
தோட்டத்து மலர்களே
உங்களுக்கு
ஓர் வேண்டுகோள்
இரவெல்லாம்
நன்றாகஉறங்குங்கள்....!!
நாளை காலையில்
விழிக்கும் போது மட்டும்
சற்று பொறுமையாக
இருங்கள்...
என் காதலியின்
வருகைக்காக..!!
நீங்கள் பூத்து குலுங்குவதை
அவளின் புன்னகையோடு
நான் காண வேண்டும்..!!
--கோவை சுபா