பானை யாத்திரை

அண்ணே நாம கட்சி ஆரம்பிச்சு அஞ்சு வருசம் ஆச்சு. இன்னும் வளர்ச்சி அடையலயே.
@@@@@@@
தம்பி நம்ம கட்சியோட சின்னம் 'பானை'. நாம பானை யாத்திரைப் போனத்தான் நம்ம கட்சியை வளர்க்க முடியும். நகர் புறங்கள் அஞ்சு நட்சத்திர விடுதிகளில்கூட சட்டி பானை சமையலுக்கு ஏகப்பட்ட வரவேற்பு. கிராமங்களில் இன்னும் மண் பாண்டங்களில் சமைச்சு சாப்படறதையே விரும்பறாங்க..மண் பாண்டத் தொழில் நசிந்து போயிருக்குது. நம்ம பானை யாத்திரை போனா தமிழகத்தில் பெரிய மாற்றமே ஏற்படும். நம்ம கட்சியும் வளர்ச்சி பெறும்..நான் சொல்லறது சரிதானே.
@@@@@@@
சரிதான் அண்ணே. வர்ற புதன்கிழமை நம்ம சொற்பத் தொண்டர்களை அழைக்கணும். வேலை வெட்டி இல்வாத பசங்க ரண்டாயிரம் பேருக்கு சாப்பாடு போட்டு கூலிகொடுத்து நம்ம பானை யாத்திரைல கலந்துக்க வைக்கணும்.
@@@@@#
அண்ணே நம்ம பானை யாத்திரை ஒண்ணே போதும் நம்ம பானை சின்னத்தில் வெற்றி மலரும்.
@@@@@@|
சரியாச் சொன்னடீடா தம்பி.

எழுதியவர் : மலர் (6-Nov-20, 12:03 am)
சேர்த்தது : மலர்91
Tanglish : paanai yaaththirai
பார்வை : 124

மேலே