பையன் பேரும் பொண்ணு பேரூம் ஒண்ணுதான

ஏன்டா நல்லசாமி, நல்லா இருக்கிறயா? வெளிநாட்டிலேயே ஏழு வருசமாத் தங்கிட்டீன்டா.. அந்த நாட்டிலேயே எனக்குச் சொந்த வீடு. குடியுரிமையும் குடுதுட்டாங்க. ஆமாம் உனக்கு எத்தனை கொழந்தைங்க?
@@@@@@
ரெண்டு கொழந்தங்க அண்ணே.
@@@##@@
அவுங்களக் கூப்புடு. பாக்கணும்.
@@@@@@@
கிரன் இங்க வாடா. இங்க வாம்மா.
#########
என்னடா நல்லசாமி, கிரன் வாடான்ற. கிரன் வாம்மானும் கூப்படற. என்னடா ஆச்சு உனக்கு.
@@@@@@@
அண்ணே எம் பேருகூட நல்லசாமி இல்ல. நல்சாமி. பையனுக்கும் பொண்ணுக்கும் ஒரே பேரு.
@@@@@@@@
என்னடா சொல்லற. நீ நல்சாமி. பையனுக்கும் பொண்ணுகும் ஒரே.பேரு. என்ன அநியாயம்டா இது நல்சாமி.
@@@@@@@@
அண்ணே வடக்க கோசாமின்னெல்லாம் பேரு இரு இருக்குது. மல்லையா மல்யா ஆகறபோது நல்லசாமி நல்சாமி ஆகறது தப்பா.
@@@@@@@
சரி உங் கொழந்தைங்க பேரு? அண்ணே கிரன் (Kiran = ray of light) (unisex name). சமஸ்கிருதப் பேரு. அந்தப் பேரை பையனுக்கும் வச்சுக்கலாம். பொண்ணுக்கும் வச்சுக்கலாம்.
@@@@@@@
நல்ல பேருடா. பையனுக்கும் பொண்ணுக்கும் ஒரே பேரு.

எழுதியவர் : மல (6-Nov-20, 11:49 pm)
சேர்த்தது : மலர்91
பார்வை : 143

மேலே