நல்லது நினைத்தால் நல்லது நடக்கும்

நல்லது நினைத்தால் நல்லது நடக்கும்

அமைதியான கிராம வாழ்க்கையை விட்டு விலகி இருந்தது அந்த நகரம் . நகரத்திற்கே உரித்தான பல பழக்க வழக்கங்களை கொண்டு இருந்தது. மீனாட்சி என்ற இலட்சியப்பெண்ணும் அங்குதான் வசித்து வந்தாள். புன்னகை ததும்பும் சிரித்த முகமாக அவள் எப்போதும் காட்சி அளித்துக் கொண்டிருந்தது ஒரு ரம்யமான சூழ்நிலையை அவளுடன் பழகுபவர்கள் உணர்வார்கள். சுறு சுறுப்பாக தேனீயைப் போல வேலை செய்வாள்.

அவள் தனியார் கம்பெனியில் ஸ்டேனோவாக சொற்ப சம்பளத்தில் வேலை செய்து கொண்டு நாட்களை நகர்த்திக் கொண்டிருந்தாள். யார் என்ன உதவி கேட்டாலும் தன்னால் முடிந்த உதவிகளை மறுக்காமல் செய்யும் இரக்க குணம் உடையவள். வேலை செய்யும் இடத்தில் ஒரு விநாடியை கூட வீணாக கழித்தது இல்லை.


ஆனால் அவள் எப்போதும் யோசனை செய்யும் விதமாக சிந்தித்துக்கொண்டிருப்பது என்னவென்று ? எதைப்பற்றியது என்று அவளுடன் நெருங்கிப் பழகிய தோழிகளுக்கும் புரியாத புதிராகவே இருந்தது.

கம்பெனியில் டைப் அடித்து முடித்து மதிய உணவு வேளை நெருங்கும் வேளையில் மூன்று மாதங்களுக்கு முன்பு நிகழ்ந்தது விட்ட அந்த கசப்பான நிகழ்வு அவள் மனதில் திரைப்படம் போல ஓடிக்கொண்டு இருந்தது.

தன்னுடைய அத்தை மகன் பாபுவை மனசார நேசித்து அவனையே விரும்பி திருமணம் செய்துகொள்ள விரும்பினாள். ஆனால் மனதில் உள்ளதை வெளிப்படையாக அவனிடம் சொல்லாமல் இருந்து விட்டாள். பாபு அவள் அம்மாவை
ஒரு பொருட்டாகவே மதிக்காமல் வேலைக்காரியை விடவும் கேவலமாகவே அவர்கள் வீட்டிற்கு வரும் சந்தர்பங்களில் அவன் நடந்து கொண்டது மீனாட்சிக்கு சிறிதும் பிடிக்கவேயில்லை.

மேலும் நாம் பாபு குடும்பத்தை விட வசதி குறைவாக இருப்பதால் திருமணம் நடந்த பிறகு மகிழ்ச்சியாக வாழ முடியுமா ? என்றெல்லாம் எண்ணினாள்.

இப்படியே நாட்கள் சென்று கொண்டிருந்த போது, திடீரென்று ஒருநாள் பாபுவின் பெற்றோர் மீனாட்சியின் வீட்டிற்கு வந்து பாபுவிற்கு நாளை மறுநாள் நிச்சயதார்த்தம் பெண் வீடு சொந்தத்தில் தான் என்று சொல்லியதை கம்பெனி விட்டு அப்போது தான் வந்திருந்த மீனாட்சி இதைக்கேட்டு துடிதுடித்துப் போய் விட்டாள். அவள் இதயமே வெடித்துவிடும் போலாகி விட்டது. அவளுக்கு எதிர்காலமே கேள்விக்குறியாகியது? அவளுக்கு நல்ல வாழ்க்கை அமைவது என்பதே கானல் நீராகிவிட்டது என்றே அவள் நினைத்தாள்.

இப்படியே ஒரு மாதம் சரியாக சாப்பிடாமலே மனது எதிலும் மனம் ஒன்றி ஈடுபாட்டோடு யாதொரு செயலையும் செய்ய முடியவில்லை..

அதன் பிறகு ஒவ்வொன்றாக பழைய நினைவுகளில் இருந்துமீள முயற்சித்தாள். ஆனால் அவ்வாறு செய்வது எளிதாக இல்லை. வாழ்க்கை வாழ்வது அவளுக்கு நரகமாக தோன்றியது . இப்படிப்பட்ட சூழ்நிலையில் அவள் தான் செய்யும் வேலையைக்கூட விட்டுவிடலாமா? என்று யோசிக்க ஆரம்பித்தாள். ஆனால் உறவினர்களுடன் கலந்து ஆலோசித்ததில் அது மனநிம்மதியை முற்றிலும் இழக்கச்செய்யும். வேலைக்கு சென்றாலாவது அந்த தருணங்களில் கவலைகளை மறந்து வேலை செய்யலாம் என்று அறிவுரைகளை கூறியதன் பேரில் வேலைக்கு வந்து கொண்டிருக்கிறாள்.


பாபுவிற்கும் வேறொரு பெண்ணுக்கும் திருமணம் நடந்து விடுகிறது. அவள் வீட்டிற்கு பாபு திருமண ஏற்பாடு விஷயமாக அவர்கள் வீட்டார் வரும் போதெல்லாம் அவள் மனம் என்ன பாடு படும் என்பதை ஏனோ அவர்கள் உணரவில்லை. அவள் மனதிற்குள் உலகமே சுய நலமாக வாழ்வதாக பட்டது .அவளுக்கு அநீதி இழைத்து விட்டதாகவே அவள் நினைத்தாள்.

அவர்கள் திருமணத்திற்குப்பிறகு அவள் கல்யாணம் செய்து கொள்வதையே முற்றிலும் விரும்பவில்லை. ஆனால் எவ்வளவு காலம் தான் அவ்வளவு உறுதியாக வாழ முடியும். அதுவும் ஒரு பெண் இந்த சமுதாயத்தில் தனியாக வாழ்வது எவ்வளவு கடினம் என்பதை புரிந்து கொண்டாள். வீட்டில் அவள் தன்னுடைய திருமணப்பேச்சை எடுத்தாலே சண்டை சச்சரவு நடப்பது தவிர்க்க முடியாத அம்சமாகிவிட்டது . அவள் தனக்கு நல்ல வாழ்க்கை அமைய கடவுளைத் தவிர வேறு யாரையும் நம்பத்தயாராயில்லை . ஆனால் நாட்கள் செல்லச் செல்ல கடவுள் மேல் வைத்திருந்த நம்பிக்கையும் சிறிது சிறிதாக குறைய ஆரம்பித்தது.

பாபுவிற்கு ஒரு தம்பி பெயர் ஸ்ரீதர் . அவன் நிறத்தில் அட்டைக்கரி. மேலும் அவனிடம் நல்ல பழக்கங்கள் எதுவுமே இல்லை . சதா அரட்டையும் கும்மாளமுமாகவே வீணாக காலத்தைபோக்கிக்கொண்டு ஊதாரியாக அப்பா பணத்தை செலவு செய்து கொண்டிருந்தான்.


அப்படிப்பட்ட ஸ்ரீதரை தனக்கு திருமணம் செய்து வைத்துவிடுவார்களோ என்று மீனாட்சி மனதில் வைத்துக்கொண்டுதான் சீக்கிரமாக கல்யாணம் செய்து வைக்கச் சொல்கிறாள் என்று அவள் பெற்றோர்கள் தவறாக எண்ணி செயல்பட்டனர்.


அவளிடம் சொந்தத்தில் ஒன்றுக்குள்ளே ஒன்று கல்யாணம் நீ பண்ணிக்கொண்டு ஒன்றாக ஒற்றுமையாக இருக்கலாம் என்று பார்த்தால் நீ இப்படி முரண்டு பிடிக்கிறாயே? சரி சரி உன் விருப்பப்படியே நல்ல வரனாக வெளியவே நல்ல நாள் பார்த்து இன்னும் ஒரு மாதத்தில் கல்யாணம் செய்து வைக்கிறோம் என்றனர்.


இத்தனை சோகங்களையும் அவள் மனதிலே சுமந்து கொண்டு எப்பொழுதும் சிரித்த முகத்துடன் இருக்கும் அவள் புன்னகையின் பின்னே பின்னி பிணைந்து இழையோடியிருப்பது மற்றவர்கள் அறிய நியாயமில்லைதான்.

குறிப்பு : - எல்லோருடைய குடும்பத்திலும் அத்தை மகள் தனக்கு தான் என்றும் அத்தையின் மகன் தனக்கு தான் என்றும் யாரும் நம்பி வாழ்ந்து மாறி மாறி வீணாக வாழ்க்கையை யாரும் தொலைத்துக்கொள்ளவேண்டாம் . மனத்திற்கு பிடித்தவர்களை திருமணம் செய்துகொண்டு சந்தோஷமாக வாழ வேண்டும்.


ஆக்கம் :- வெங்கட்

எழுதியவர் : வெங்கட் (7-Nov-20, 9:03 pm)
சேர்த்தது : வெங்கட்
பார்வை : 287

மேலே